2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொம்பனித்தெரு பகுதியில் இன்றும் இரண்டாவது நாளாக வீடுகள் உடைப்பு

Super User   / 2010 மே 09 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE கொம்பனித்தெரு பிரதேசத்தில் இன்றும் இரண்டாவது நாளாக  சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த வீடுகள் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வீடுகள்  அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதை தமிழ்மிரர் இணையதளம் நேரடியாக சென்று அவதானித்து.

வீடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு பாதுகாப்பாக 50க்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  21 வீடுகள் தற்போது  தரை மட்டமாக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

1985ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச, பிரதமராக இருந்த காலப்பகுதியில் மேற்படி வீடுகள் தமக்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும், இதற்கான வீட்டு உறுதிப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டனர்.

இந்த  வீடுகள் நேற்று முதல் அகற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தமக்கு அரசாங்கத்தால் எந்தவித மாற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ள மக்கள், தாம் வீடுகளின்றி வீதிகளில் அநாதைகளாக நிற்பதாகவும் தெரிவித்தனர்.

தமது வீடுகள் நேற்று முதல் அகற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்,இந்த வீட்டுப்பிரச்சினை தொடர்பாக ஆளும் அரசாங்கம் மற்றும் எதிர்தரப்பு சார்பாக கொழும்பில் உள்ள அரசியல் வாதிகள் யாரும் தமக்கு உதவி செய்யவில்லை என்று கடும் கண்டம் தெரிவித்தனர்.

இந்தப்பகுயில், சட்டவிரோதமாக வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றது என்று கூறி தங்களை பலவந்தமாக வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த பகுதியில் வசித்து வந்த அனைத்துக் குடும்பங்களும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(R.A)



You May Also Like

  Comments - 0

  • KONESWARANSARO Monday, 10 May 2010 02:59 PM

    சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத எம்பிக்கள் இருந்தென்ன இறந்தென்ன?

    Reply : 0       0

    xlntgson Monday, 10 May 2010 10:00 PM

    எம்.பி.கள் அல்ல கடைசியாக அரசுடன் இணைந்து கொண்டவர்கள் பதில் கூறவேண்டும், பௌசியை தவிர கொழும்பில் முஸ்லிம் ஒருவரும் வெல்லவில்லை. அலவிமௌலானாவின் பேச்சும் எடுபடவில்லை ஓமர் காமில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டார். அஸ்வர் புத்தளத்துக்கு போய் விட்டாரோ தெரியவில்லை. எழுத்துப்பூர்வமான சம்மதம் இல்லாமல் இடிக்கக்கூடாது என்று உணரவேண்டும். உணர்ச்சிகள் கொந்தளிப்படைவதே இனப்பிரச்சினைகள் உருவாக காரணம் என்பது தெளிவடைந்தோர் அறிவர். ஒன்று போய் இன்னொன்று வரும். மூக்கும் சளியும் மாதிரி.

    Reply : 0       0

    nuah Tuesday, 11 May 2010 09:32 PM

    தனியார் வசம் கட்டிமுடிக்கப்பட்டு கேள்வி இல்லாமல் இருக்கும் கடை & வீட்டுத்தொகுதிகள் அநேகம் இருக்கின்றன என்று தெரிகிறது. கட்டுமான செலவு கூட, என்று விலையை குறைக்க முடியாமல் இருக்கின்றனர் அவற்றைப்பெற்றுகூட இவர்களுக்கு அரசு கொடுக்கலாம். கட்டுமான துறையும் தனியார் துறையும் வளர்ச்சிபெறும் அரசு இலவசமாக கட்டி கொடுக்க இயலுமா எல்லாருக்கும் தற்காலிகமாகவோ அல்லது 40 வருட பெற்றோர் & பிள்ளைகள் கட்டும் நீண்ட சிங்கப்பூர் கடன் மாதிரி கொடுக்கலாம் மாதாந்திரம் கட்டும் தொகையும் குறைவு, யோசனை எப்படி? சகடையா, சப்பட்டையா?

    Reply : 0       0

    sisra Wednesday, 12 May 2010 10:16 PM

    சகடை: தனியார் துறை அரசுத்துறை இணைந்து செயல்படவேண்டும் என்பது.
    சப்பட்டை: அரசு நிலங்களை மக்களிடமிருந்து பெற்று நஷ்ட ஈடு தருவதாக ஒத்துக்கொண்டு திறைசேரியில் பணமில்லை என்று நிலுவையாக நிற்கும் தொகையை அறிந்துகொண்டால் இவற்றையும் பெற்று என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். தனியார் பொருளாதாரத்தின் உந்து சக்தி என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சழகே. ஒரு போதும் செயல்படுவதில்லை. வெளிநாட்டு உதவிகளைப்பெற்று செய்தாலும் சந்தேகக்கண் கொண்டு பார்த்து வழக்குகளை போட்டு விரட்டி விடுவர். என்.ஜி.ஓ.வா, அதுவா இதுவா என்று!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .