2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கயந்த கருணாதிலகவுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை-பஷீர் சேகுதாவூத்

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமணம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைமைத்துவம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்.

மேலும், கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் சொத்தாகும். இதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க தயார் இல்லை. இது சம்பந்தமாக ஒரு இணக்கத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் வராத பட்சத்தில், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து பிரியவும் தயார் என அவர் தெரிவித்தார்.

இந்நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கரமசிங்ஹவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது தெரியாமல் தான் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமணம் தொடர்பில் கலந்துரையாடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவம் இது சம்பந்தமான பதிலை விரைவில் தரும் என எதிர்பார்க்கின்றோம்.

இது சம்பந்தமாக சாதகமான பதில் கிடைக்காத விடத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுர் பீட கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.(R.A)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .