2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுநீரக வைத்தியசாலைக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுநீரக வைத்தியசாலைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி முன்னிலையில், இன்று (06) கைச்சாத்திடப்பட்டது.

200 கட்டில்கள், 100 குருதி சுத்திகரிப்பு கருவிகள், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்யக்கூடிய நவீன சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றுடனான தேசிய மட்டத்திலான இந்த வைத்தியசாலை 12 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மூலகாரணம் இனங்காணப்படாத சிறுநீரக நோயினால் நாடுமுழுவதும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்டகால தேவைகளை நிறைவுசெய்வதற்காக நிர்மாணிக்கப்படும் இந்த சிறுநீரக மருத்துவமனைக்கான அடிக்கல் ஜூலை மாதத்தில் ஜனாதிபதியால், நாட்டப்படும்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்ரகுப்தவும், சீன அரசாங்கத்தின் சார்பில் சீன தூதரக பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் யங் சுவோயுஆளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .