2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியின் அரசியல் வாழ்வில் இன்றுடன் 40 ஆண்டுகள் பூர்த்தி

Super User   / 2010 ஜூன் 07 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்குப் பிரவேசித்து இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

1970ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த தொகுதியில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸ, 6,626 மேலதிக வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

தனது 24 வயதில் அரசியலுக்குப் பிரவேசித்த அவர் அரசியலிலான அனுபவம் மற்றும் திறமையினைப் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி இன்று நாட்டின் முதல் குடிமகனாகவும் ஜனாதிபதியாகவும் நாட்டை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .