2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவாக வீரவங்ஸ பேசியது ஒரு நாடகம் -ஹேரத்

Super User   / 2010 மே 05 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

விமல் வீரவங்ஸவுக்கு அரசாங்கத்துக்குள் பெரும் நெருக்கடிகள் தோன்றியுள்ளன.இதன் காரணாமாகவே அவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவாக பேசுகிறார் என ஜனநாயக தேசிய முன்னணியின் பேச்சாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

இன்று ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்றத்துக்கு வருகை தர அனுமதிக்கப்படவில்லை.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விமல் வீரவங்ஸ நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அதிர்ச்சியொன்றை கொடுப்பதற்காகவே இவ்வாறு விமல் வீரவங்ஸ பேசினார்.

இது ஒரு வெறும் நாடகம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 06 May 2010 09:48 PM

    விமல்வீரவன்ச தமிழ்சிவிலியன்கள் கொல்லப்படுவதை 'செய்ய வழியில்லை', என்று ஆதரித்தும் பேசிஇருக்கிறார். ஐ.நா நடவடிக்கையில் இதுவும் பேசப்படலாம் என்று பயப்படுவதாக இருக்கலாம். தனது நண்பருக்கு தேசியப்பட்டியல் எம்.பி.பதவி கொடுக்கவில்லை என்பதற்கு கூட ஏதாவது ஏடாகூடமாக பேசக்கூடும். இளைஞர்கள் அரசியலில் இன்னும் எவ்வளவோ படிக்க வேண்டியதிருக்கிறது. அவர் சிங்கள உணர்ச்சி ததும்ப பேசியதெல்லாம், கலாச்சார அமைச்சை ஏற்க மறுத்ததில் இருந்தே தெரிகிறது, முதன்மை விருப்புவாக்கு பெறவே இந்நாடகம் என்று. ஒரு வகையில் நல்ல அறிகுறியே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .