2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தபால் சேவை சாகாது

Kogilavani   / 2016 ஜூலை 12 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

இலங்கை தபால் சேவையானது, தொழில்நுட்ப வளர்ச்சியோடு தேவையற்ற ஒன்றாக மாறுமென்ற கருத்து, வெறுமனே புனைக் கதையாக மாத்திரமே இருக்குமெனத் தெரிவித்த தபால் அதிகாரிகள், இச்சேவையானது, புதிய பரிணாமத்துடன் தொடர்ந்து இருக்கும் என்று, நேற்றுத் திங்கட்கிழமை (11) கூறினார்.  

'தபால் சேவை எதிர்நோக்கிய ஆட்குறைப்பையும் தாண்டி, புதிய பகுதிகளில் இச்சேவை உருவாக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கான பத்திரங்களை விநியோகிப்பதற்காக, வங்கி மற்றும் நிறுவனங்களுடன் தபால் சேவை திணைக்களம் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளது. இதனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு, தபால் சேவையானது சாகாது'  என்று தபால் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

இதேவேளை, 'மக்கள் உணர்ந்து வைத்துள்ளதை விட, தபால் சேவை மற்றும் தொழில்நுட்பம் போன்றவை வித்தியாசமானவையாகும். இணையம் மூலம் மக்களால் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள், தபால் சேவை மூலமே விநியோகிக்கப்படுகின்றன.  தபால் சேவையும் இலத்திரனியல் வர்த்தகத்துக்குள் உள்ளடக்கப்படுகின்றது' என்று அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரட்ண தெரிவித்தார்.

மேலும், 'மக்களால் மேற்கொள்ளப்படும் காசுக் கட்டளைகள், இனிவரும் காலங்களில் புதியதோர் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போது பணம் பயன்படுத்தப்படாது' என்றும் அவர் தெரிவித்தார்.

'தினந்தோறும் 120,000 கடிதங்கள் அஞ்சல் அலுவலகங்களுக்கு வருகின்றன. எமது பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இன்னும் 2,000 அஞ்சல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .