2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேசியப்பட்டியல் விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , மு.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்துச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை, டிசெம்பர் 7ஆம் திகதி வரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனு நேற்று திங்கட்கிழமை(23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஐ.ம.சு.கூ செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஒரு தேசியப்பட்டியலை சமர்ப்பித்தார்.

தேர்தலின் பின்னர், ஜனாதிபதியினால், செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விஷ்வ வர்ணபால இன்னொரு தேசியப்பட்டியலை வெளியிட்டார்.

இந்நிலையில், தோல்வியடைந்த வேட்பாளர்கள், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிப்பது, அரசியலமைப்புக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ள மனுதாரர் தரப்பு, இதனை இரத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளது.

லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன மற்றும் மஹஜன எக்சத் பெரமுனவின் பிரதி தலைவர் சோமவீர சந்திரசிறி ஆகியோரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .