2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பணிப்பெண்ணாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையை குறைக்க ஏற்பாடு

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிப்பெண் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் ,லங்கைப் பெண்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.மத்திய கிழக்கிலும் ரஷ்யாவிலும் பணிபுரிந்து உயிரிழந்த இலங்கைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கான ,ழப்பீடும் சம்பள நிலுவையும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவலகத்தில் வைத்து நேற்று வழங்கிவைக்கப்பட்டது.

இது, பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவினால், 50 மில்லியன் ரூபாய் பணம், 40 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.  அதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறான நிகழ்வு, இவ்வாண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வாண்டில் மாத்திரம், 116 குடும்பங்களுக்காக 169 மில்லியன் ரூபாய், ,வ்வாறு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில், 180 குடும்பங்களுக்காக 195 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது.

சவூதி அரேபியா, கட்டார், குவைத், ,ஸ்ரேல், ஓமான், துபாய், ஜோர்டான், பஹ்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளிலுள்ள ,லங்கைத் தூதரங்களின் உதவியுடன் இந்த நிதி, பெற்றுக் கொள்ளப்பட்டது. அத்தோடு, பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி, அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் காரணமாகப் பெறப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இவ்வாறான செயற்பாடுகளைத் துரிதப்படுத்துமாறு, வெளிநாடுகளிலுள்ள தூதுரங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பணிப்பெண் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இலங்கையில் பணியாற்றும் போதே, இலங்கையின் பொருளாதாரத்துப் பெண்கள் அதிக பங்களிப்பை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கு, அரசாங்கம் கொள்கையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .