2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மாங்குளத்தில் புதிய பொருளாதார வலயம்’

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், மாங்குளத்தில் புதிய பொருளாதார வலயம் உருவாக்கப்படும்” என்று மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

“இப்பொருளாதார வலயம் ஜனாதிபதி மற்றும் வடக்கு முதலமைச்சரின் ஒப்புதலுடன் மிக விரைவில் அமைக்கப்படும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு, நேற்று (12) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன்போது, காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக பல வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றோம். குறிப்பாக, வட மாகாணத்தில் பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். அதனை மாங்குளப் பகுதியில் அமைக்கவுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளோம். மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுடனும் பேசி அவர்களின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.

இந்தப் பொருளாதார வலையத்தை வடக்கில் உருவாக்கிக் கொள்வதன் ஊடாக இங்குள்ள மக்களின் பெரும்பான்மையான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று நம்புகின்றோம்.

முதலாவதாக, அதிகளவானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் ஊடாக மக்களின் பெருளாதாரம் உயர்வடையும்.

இவ்வலயத்தினை உருவாக்கி இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பெரும் பொருளாதார உயர்வை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .