2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மனித உரிமை குற்றச்சாட்டு; சர்வதேச விசாரணை அவசியமில்லை-கெஹெலிய

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆர்ம்பித்துள்ளது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு அவசியம் இல்லை என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் கேட்டபோதே ஊடக அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு இறைமையுள்ள நாடு என்றும் அதன் உள்விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் உரிமை நாட்டுக்கே உண்டு என்றும் எடுத்துக்காட்டினார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள சில நடவடிக்கைகளை வேறு சில நாடுகளும் ஆமோதித்துள்ளன. எவ்வாரெனினும் தவறுகளை நாங்களே திருத்திக்கொள்வதில் தற்போது அதிக அக்கறை காண்பித்து வருகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .