2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முன்னாள் இராணுவ தளபதியிடம் 5 மணிநேரம் விசாரணை

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் 5 மணித்தியாலத்துக்கும் அதிகமாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த 1 கோடி ரூபாய் பெறுமதியான இயந்திரம், பழைய இருப்பு துண்டுகள் என்ற பெயரில், துண்டுகளாக்கப்பட்டு அகற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது. 

ஆணைக்குழு அறிவித்தமைக்கு அமைய, நேற்று முற்பகல் 9.30 மணியளவில் ஆணைக்குழுவுக்கு வருகைதந்த முன்னாள் இராணுவ தளபதியிடம் மதியம் 12.45 மணிவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

“யுத்தத்தின் பின்னர், இந்த தொழிற்சாலையை சுற்றி காணப்பட்ட பழைய இரும்பு துண்டுகளை அகற்றுவதாக தெரிவித்து, சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் சீமெந்து நிறுவனத்துக்கு தெரியாமல், இந்த பெறுமதியான இயந்திரம் துண்டுகளாக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இதன்காரணமாக, சீமெந்து நிறுவனத்துக்கு 1 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது” என, செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில், முன்னர் அங்கு கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகளிடம் எதிர்காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .