2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்க தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம் தீர்மானம்

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம் தமது எதிர்காலக் கூட்டங்களில்  முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகத் தமிழ்க்கட்சிகளையும் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.

 

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தின் மூன்றாவதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

மேற்படி ஒன்றியத்தில் தற்போது 9 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓன்றியத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிநிரல் ஆகியன குறித்து இன்றைய கூட்டத்தின்போது கட்சிகளிடையே இணக்கப்பாடு காணப்பட்டதாகவும் அவை குறித்த விபரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

"அடுத்த கட்டத்தில் முஸ்லிம் கட்சிகள்,  மற்றும் மலையகக் கட்சிகளுக்கும் இதில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்படும். இதன் மூலம் இலங்கையிலுள்ள ஏறத்தாழ சிறுபான்மையினக் கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினருக்காக ஒரே குரலில் பேச முடியும் என எதிர்பார்க்கிறோம்" என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .