2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். குடாநாட்டில் இன்று நடைபெறவிருந்த கண்டனப்பேரணி இடைநிறுத்தம்

Super User   / 2010 மே 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நடைபெறவிருந்த கண்டனப் பேரணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அறிவிப்பை அடுத்தே, மேற்படி கண்டனப் பேரணி இடைநிறுத்தப்பட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்து  மற்றும் கிறிஸ்த மதகுருமார் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக சமூகம், பொது அமைப்பினர், யாழ் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொள்ளவிருந்த இந்த கண்டனப் பேரணியானது இன்று நண்பகல் யாழ்.கோட்டை, முனியப்பர் கோவில் முன்றலில் நடைபெறவிருந்தது.

அத்துடன், மேற்பட்டி குற்றச்செயல்கள் தொடர்பில் யாழ் அரசாங்க அதிபர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர் ஆகியவற்றில் மகஜர்களும் கையளிக்கப்படவிருந்தன.

இந்நிலையிலேயே, இந்தக் கண்டனப் பேரணி பொலிஸாரின் அறிவுறுத்தல்களுக்கமைய இடைநிறுத்தப்பட்டிருப்பதாக மேலும் தெரியவருகிறது.

யாழ். சாவகச்சேரி, மானிப்பாய், கட்டுடை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவிலான கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0

  • rifai Sunday, 02 May 2010 08:30 PM

    தயவு செய்து உங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் யாழ் மக்களே !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .