2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரியூனியன் தீவுக்கு செல்ல முற்பட்ட 90 பேர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள ரியூனியன் தீவுக்கு, சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 90 பேரை, நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் இன்று (112) கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 89 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளடங்குகின்றனர் என, கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கடற்பரப்பில், சந்தேகத்துக்கு இடமான முறையில் டோலர் படகொன்று தரித்து நிற்பதாக, கடற்படையினருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, மேற்படிப் படகைச் சுற்றிவளைத்து சோதனையிட்டபோதே, மேற்படி 90 பேரும் கடல் மார்க்கமாக ரியூனியன் தீவுக்கு செல்ல முற்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்படி 90 பேரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், மட்டக்களப்பு, தொடுவாவ, உடப்பு, ஹலாவத்த, மன்னார், அம்பாறை மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .