2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாகனங்களுக்கு 50வீத இறக்குமதி தீர்வை உடன் அமுல்ப்படுத்த அரசு நடவடிக்கை

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி தீர்வையினை 50வீதத்தினால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், வாகங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதை அடுத்தே வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மின்சார உபகரணங்களின் மேலதிக வரிச்சுமை 15 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாருதி கார்களுக்கான இறக்குமதி வரி இன்று முதல் 90 வீதமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குறித்த கார்களுக்கு 183 வீத இறக்குமதி வரி அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
 

You May Also Like

  Comments - 0

  • ishrath Thursday, 03 June 2010 03:25 AM

    இது ஒரு வரவேற்க வேண்டிய விடயம், உலகநாடுகளில் இலங்கையில்தான் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிகின்றது, இது மேலும் குறைக்கபடனும். ஏனெனில் இலங்கையில் சிறந்த போக்குவரத்து வசதிகள் குறைவாகவே இருக்கின்றன. இந்த வரி மேலும் குறைந்தால் அநேகமானவர்கள் வாகனம் வாங்கி அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். வாழ்க இலங்கை வளர்க தாய்நாடு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .