2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குற்றம் சுமத்தப்பட்ட நபர் 11 வருடகால வழக்கு விசாரணையின்பின் விடுதலை

Super User   / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கொண்டு  சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 2000 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுக்கப்பட்ட நபர் ஒருவரை 11 வருடங்களின்பின் நிரபராதி என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது.

சந்திரகுமார் ரொபர்ட் புஷ்பராஜ் எனும் நபருக்கு எதிரான வழக்கு  கொழும்பிலும் நீர்கொழும்பிலும் பல நீதவான்கள் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் 11 வருடங்களாக விசாரிகக்ப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ, சந்தேக நபரை நேற்று விடுதலை செய்தார்.

இச்சந்தேக நபர் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி சுனில் ராஜபக்ஷ தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதல்ல எனவும், சமர்ப்பிக்கப்பட்ட பொருட்கள் குற்றம் சுமத்தப்பட்ட நபர் பயணித்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த   வழக்குத்தொடுநர் தரப்பு தவறிவிட்டது எனவும் நீதிபதி கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • Broom Saturday, 17 September 2011 08:48 PM

    சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவனின் பதினோரு வருட காலத்தையும் அவனுக்கு யாரால் கொடுக்கமுடியும்? ...........
    இதன் தீர்வு என்ன ?

    Reply : 0       0

    AJ Saturday, 17 September 2011 11:33 PM

    இது போல பலர் எதுவித குற்றமும் செய்யாமல் எதுவித விசாரணையும் இல்லாமல் தமிழர் என்ற படியால் பயங்கரவாத, அவசரகால என்று ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள். லங்கா அரசின் இந்த நடவடிக்கையை உலகம் இன்றும் வெறுமனே பார்த்துகொண்டு இருக்கிறது. இதுக்கு ஒரு முடிவு கட்ட உலகம் முன்வரவேண்டும்

    Reply : 0       0

    Mathews Sunday, 18 September 2011 05:15 PM

    இது தமிழர்களுக்கு மட்டுமில்லை.. மற்றும் இலங்கையர்களுக்கு மட்டுமில்லை. சற்று உலகத்தை சுற்றி பாருங்கள். இந்த பாரிய உலகத்தில் இருக்கும் தமிழ் மக்களும் இலங்கை நாடும் மிகவும் சிறியதும் சொற்பமும்தான். எத்தனையோ பெரிய பெரிய நாடுகளில் தமிழ் மக்கள் அல்லாதோரின் மீது இத்தகைய கொடுமைகள் நடக்கிறது. அது பற்றியும் யாரும் அக்கறை கொள்வதில்லை.
    தமிழனை மட்டும் பார்காதீர்கள். ஒரு சராசரி மனிதனாய் நின்று பாருங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .