2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிழக்கில் 15 கண்காணிப்பு உறுப்பினர்கள் நியமனம்

Super User   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-றிப்தி அலி


கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு கண்காணிப்பாளர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண சபையில் எந்தவித பதவிகளும் வகிக்காத ஆளும் கட்சியின் 15 உறுப்பினர்களுக்கே இந்த கண்காணிப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கத்தில் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை போன்றே கண்காணிப்பு மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இவர்களுக்கான நியமன கடிதங்கள் முதலைமச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இந்த கண்கானிப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளத்திற்கு மேதிகமாக 40,000 ரூபா மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.

இவர்களுக்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள திணைக்களங்களின் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், பின்னடைவுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிக்கையினை முதலமைச்சருக்கு மாதாந்தம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு  ஒதுக்கியுள்ள திணைக்கள விபரம்



You May Also Like

  Comments - 0

  • Avathanee Wednesday, 20 February 2013 03:22 PM

    மாகாண சபைக்கு 6 லட்சம் மேலதிக செலவு.. எந்த நன்மையும் இல்லை..

    Reply : 0       0

    mbm Thursday, 21 February 2013 04:22 AM

    நல்லா வருவீன்க!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .