2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

2 மாளிகைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணி, கொழும்பில் இன்று முன்னெடுக்கவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி காரணமாக, சிற்சில இடங்களின் பாதுகாப்பு வழமைக்கு மாறாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், ​கொழும்பில், லிப்டன் சுற்றுவட்டம், கோட்டை ரயில் நிலையம், மருதானை சந்தி உள்ளிட்ட இடங்களில், வழமையான நாட்களை போல, வாகன நெரிசல்கள் இல்லை.

அவ்விடங்களை பார்க்கின்ற போது, விடுமுறை நாள்​போன்றே காட்சியளிக்கின்றது. இதேவேளை, சனநெரிசலும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

எனினும், பேரணி வருவதாக கருதப்படும், கொழும்பை நோக்கிய பிரதான வீதிகளில் சிற்சில இடங்களில், வீதியோரங்களில் பொலிஸார், கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நோக்கிச் செல்லும் வீதிகளின் ஓரங்களில், போக்குவரத்து தடையை ஏற்படுத்தும் வகையில், இரும்பு கம்பிகளிலான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்னும் சில இடங்களில் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகை ஆகிய இரண்டு மாளிகைகளுக்கு செல்லும் வீதிகளில், மேலதிக பொலிஸார் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், அந்த இரண்டு மாளிகைகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .