2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம்; கேலிக்கூத்தென கூட்டமைப்பு விமர்சனம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சியில் எதிர்வரும் 14ம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதானது வெறும் கேலிக்கூத்தான விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

குறித்த பகுதியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்துவதற்கு முன்னர் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று கூறிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அதைவிடுத்து அமைச்சரவைக் கூட்டம் நடத்துவது வெறும் அரசியலாகும் என்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், அமைச்சரவைக் கூட்டம் நடத்த செலவு செய்யும் பணத்தை அம்மக்களின் நல்வாழ்விற்காக செலவிட்டால் சிறந்தது எனவும் அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.

கிளிநொச்சியைக் காணாதவர்கள் யாரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை. எங்களைவிட அதிகமுறை கிளிநொச்சி சென்றவர்களே இன்று அதிகம் அமைச்சரவையிலுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • koneswaransaro Sunday, 11 July 2010 05:51 PM

    நடமாடும் சேவைகளால் அரசு இதுவரை எதையும் சாதிக்கவில்லை. அதேபோல நடமாடும் அமைச்சரவைக் கூட்டத்தாலும் எதையும் சாதிக்கப் போவதில்லை.மூளை உள்ளவன் மூலைக்குள் இருந்தாலும் சரியாகச் செயல்படுவான் என்பது அறிஞர் வாக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .