2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீதிக்கு எதிரான பிரசாரத்தை எதிரொலிக்கிறது: மனித உரிமைகள் கண்காணிப்பக

Super User   / 2010 ஜூலை 12 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தலைமையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது போர்க் குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் பகிரங்க விரோதத்தை வெளிப்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று விமர்சித்துள்ளது.

கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் பிரசாரங்களில் புதிய திருப்புமுனையாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பதில் பணிப்பாளர் அலைன் பியர்ஸன் தெரிவித்துள்ளார்.

"இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த கொடூரங்கள் குறித்து விசாரணை நடத்துவதில் இந்த அரசாங்கம் தீவிரமாக இருக்கும் எனக் கருதுபவர்கள் எவரேனும் ஐ.நா.  செயலாளர் நாயகத்திற்கான மூன்று ஆலோசகர்களுக்கு எதிரான தொந்தரவுகளை அவதானிக்க வேண்டும்" என அலைன் பியர்ஸன் கூறியுள்ளார்.

"கொழும்பில் இடம்பெற்ற ஐ.நாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதியாக நிற்பதானது இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டிற்கான அவசியத்திற்கான உறுதியான சம்மதமாக உள்ளது. இலங்கை அரசாங்கம் பான் கீ மூனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைவிட, அவருடன் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் இது"  எனவும் பியர்ஸன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • futaint Tuesday, 13 July 2010 01:40 AM

    GosL never ever going to co-opearate with UN, whole world watching thiers drama.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .