2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நுவரெலிய பொலிஸாரால் வெள்ளமுள்ளி வாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)

வெள்ளமுள்ளிவாய்க்கால் மற்றும் கரையா முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளின் ஏழு இடங்களில் இருந்து பெருந்தொகையான
ஆயுதங்களை நுவரெலியா பொலிஸார் கைப்பற்றி எடுத்து வந்துள்ளனர்.

இவ் ஆயுதங்கள் அனைத்தும் கடந்த 10,11 ஆம் திகதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு நுவரெலியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ணவின் பணிப்புரையின் பேரில் மத்திய தெற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி ஜயந்த கம்மன்பிலவின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி மத்துரட்ட, காவல் துறை தலைமையக பொறுப்பதிகாரி அமல் ரணவீர ஆகியோரின் மேற்பார்வையில் பொலிஸ் விசேட சேவை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சுதத் பொன்சேகா தலைமையிலான குழுவினரே இந்த ஆயுதங்களை வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் கைப்பற்றினர்.

இந்த ஆயுதங்களை நுவரெலிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி மத்துரட்ட, காவல் துறை தலைமையக பொறுப்பதிகாரி அமல் ரணவீர ஆகியோர் பார்வையிடுவதையும்  மற்றும் பொலிஸ் விசேட சேவை பிரிவின் பொலிஸ்  பரிசோதகர்  சுதத் பொன்சேகா தலைமையிலான குழுவினர் இவ் ஆயுதங்கள் தொடர்பாக விளக்கமளிப்பதையும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .