2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சந்திரிகா, ரணில் காலத்து உடன்படிக்கைககளால் மின்சார சபைக்கு நஷ்டம்:அமைச்சர் சம்பிக்க

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கங்கள் 9 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை மின்சாரசபை, கம்பனிகளிடமிருந்து மின்சாரத்தை பெறாவிட்டாலும் பணம் செலுத்த வேண்டும். அவ்வகையில் வருடந்தோறும் 15 பில்லியன் ரூபாவை மின்சாரசபை செலுத்த வேண்டியுள்ளது என்று மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை சட்டபூர்வமாக ரத்துச் செய்யும் வழிவகைகளை ஆராய்வதற்காக அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபை தனியார் கம்பனிகளிடமிருந்து ஒரு அலகு மின்சாரத்தை 17.56 ரூபாவுக்கு வாங்கி கைத்தொழில் நிறுவனங்களுக்கு 10.30 ரூபா விலையிலும் வீடுகளுக்கு 12.55 ரூபா விலையிலும் வழங்குகின்றது.

மின்சக்தி மற்றும் வலு அமைச்சு குறைந்த செலவில் அனல் மின்சாரத்தை உற்பதி செய்து வேறு  வலுக்களால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிடவே விரும்புவதாக அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • sahib Thursday, 19 August 2010 04:58 AM

    எத்தனை காலத்துக்குத்தான் முன்னைய அரசு மீது பழி சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். இனிமேலாவது அதை விட்டு விட்டு நாட்டை முன்னேற்ற என்ன செய்யலாம் , அதைப் பற்றி பேசுங்கள். நாட்டில் யுத்தம் முடிந்து விட்டது. இனிமேல் இனம் மொழி பாராது நமது நாட்டை முன்னேற்றுவோம். அதற்காக எல்லோரும் ஒன்று படுவோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .