2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கரடியனாற்றில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் பார்வையிட்டார்

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

 

 

                                                                   (றிபாயா நூர்)

கரடியனாறு பொலிஸ் நிலைய நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் தி.மு.ஜயரட்ன  இன்று வெள்ளிக்கிழமை  மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார்.

வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

அத்துடன் சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர் தி.மு. ஜயரட்ன, இதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்புக் கொடுப்பனவு வழங்கப்படுமென குறிப்பிட்டார்.

பிரதமருடன் சீனாத் தூதுவர் யங் க்சூப்பிங் மற்றும் மற்றும் சீன  தூதரக அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன்
குணதிலக ஆகியோரும் அங்கு சென்றனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குபிரதமர்   நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன் போது சம்பவம் தொடர்பான முழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

பிரதமருடன் அரசாங்க பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.(படங்கள்:றிபாயா நூர், பிரதீப் பத்திரன)

alt

alt

alt

alt
 


You May Also Like

  Comments - 0

  • jameel Saturday, 18 September 2010 02:44 AM

    எல்லாம் இறைவன் நாட்டம் . நம் கையில் ஒன்றும் இல்லை.ஆனால் கொஞ்சம் நிதானமாய் வெடி மருந்துகளை கையாள வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .