2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடி, மின்னல் குறித்து மக்கள் அவதானமாக இருக்கும்படி பணிப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(Gandhya Senanayake)

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கரையோர பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விழிப்பாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மையம் பொதுமக்களை வேண்டிநிற்கிறது. உங்கள் பிரதேசங்களில் வெள்ளம் தொடர்பான ஐயம் நிலவினால் அனர்த்த முகாமைத்து மையத்துடன் 0112670002 என்ற தொலைபேசி இலகத்தினூடாக தொடர்புகொள்ளும்படியும் பொதுமக்கள் வேண்டப்படுகிறார்கள்.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் களு கங்கை, நில்வள கங்கை, களனி கங்கை போன்ற நதிகள் பெருக்கெடுக்கும் அபாயம் நிலவுவதாகவும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நிலவும் சாத்தியம் இருப்பதாகவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி கருத்து தெரிவிக்கையில்... 'சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவும் சாத்தியம் இருக்கிறது. மலை நாட்டின் சில பிரதேசங்களிலும் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் ஆற்றோரங்களை அண்டியிருப்பவர்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. தொடர்ந்தும் இடி, மின்னல் அபாயம் இருப்பதால் இலத்திரனியல் பொருட்களை பயன்படுத்தும்போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தால் எங்களுக்கு பொதுமக்கள் அறிவிக்கவும் முடியும்' என குறிப்பிட்டார்.

தென் கிழக்குப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையும் இடி, மின்னல் பாதிப்புகளும் நிகழக்கூடிய சாத்தியங்கள் எதிர்வரும் சில நாட்களில் இருப்பதாகவும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • raju Thursday, 04 November 2010 12:54 AM

    இடி எதனால் வருகிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .