2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியை விஸ்தரிப்பதற்கு அங்கீகாரம்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியை 750 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் டி.எம். ஜயரட்ண இது தொடர்பாக சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்தது.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியின் இடவசதி, உத்தியோகபூர்வ பணிகளை இலகுவாக மேற்கொள்வதற்குப் போதுமானதல்ல எனவும் அதனால் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அருகிலுள்ள காணியில் இக்கட்டிடத் தொகுதி விஸ்தரிக்கப்படும் எனவும் அப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைய மற்றும் ஏ.டி.எஸ்.எல். கட்டணங்களுக்காக மாதாந்தம் 40,000 ரூபா தொலைபேசி அலவன்ஸ் வழங்கும் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • jeyarajah Thursday, 04 November 2010 12:16 PM

    மகாவலித தண்ணீர் இன்றும் கடலில் கலந்து கொண்டிருக்கின்றது.
    ரத்னபுர நகரம் ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தில் தாண்டு கொண்டிருக்கிறது.இவைகள் அமைச்சர்களின் கண்ணுக்கு ஏன் தெரிவதில்லையோ தெரியாது. இருந்து கதைக்கும் இடத்திற்கு இவ்வளவு பண ஒதுக்கீடு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .