2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகம் சர்வதேச மட்டத்திற்கு தரமுயர்த்தப்படும்

Super User   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

யாழ். பல்கலைக்கழகம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் சர்வதேச மட்டத்திற்கு தரமுயர்த்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் உயர்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்களை அரசாங்கம் அபிவிருத்தி செய்கிறது.  ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தை இந்த அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து ஒதுக்கியுள்ளது எனக் கூறினார்.

அதற்கு பதிலளித்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, யாழ். பல்கலைக்கழகத்தை அரசாங்கம் ஒதுக்கவில்லை எனவும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அப்பல்கலைக்கழகம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளது. எனவும் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .