2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விசேட விடுமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும்'

Super User   / 2011 ஜனவரி 17 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நபீலா ஹுஸைன்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதுடன் ஒரு மாத சம்பளத்தை வட்டியில்லாக் கடனாக வழங்குமாறு அரசாங்கத்திடம்  அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தது.


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அது ஒரு சுற்று நிருபமாக வெளியிடப்படவில்லை என அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சமந்த கோரளஆரச்சி தெரிவித்தார்.

'விடுமுறை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அரசாங்க ஊழியர்கள் இதற்கு முன்னர் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். ஊழியர்களின் விடுமுறையை அங்கீகரிப்பதற்கு முன்னர் தமது வீடு பாதிக்கப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர். அதனால்தான் நாம் ஒரு சுற்றுநிருபத்தின் மூலம் விடுமுறையை உறுதிப்படுத்துமாறு நாம் கோருகிறோம்' என அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .