2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பொதுமக்களை படையினர் பலவந்தமாக பதிவு செய்வதற்கு எதிராக வழக்கு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழ்கின்ற மக்களை பாதுகாப்பு படையினர் பலவந்தமாக பதிவு செய்வதை நிறுத்தக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று இன்று தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை சட்டத்தரணி மோகன் பாலேந்திரா மூலம் தாக்கல் செய்தனர்.

கட்டாயப்படுத்தி 100 ரூபா பணம் அறவிடுதல், படம் பிடித்தல், பதிவு செய்தல், என்பவற்றை உடனடியாக நிறுத்தும்படி இவர்கள் கோருகின்றனர். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ பேச்சாளர் உபய மெதவல, யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக காட்டப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .