2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பஹ்ரெய்னிலுள்ள இலங்கையர்களை பதிவு செய்ய நடவடிக்கை

Super User   / 2011 மார்ச் 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பஹ்ரெய்னிலுள்ள இலங்கையர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பஹ்ரெய்னில் சுமுகமற்ற சூழ்நிலைகளின் போது இலங்கையர்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு அதிகாரிகள் சிரமப்பட்ட நிலையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பஹ்ரெய்னில் இலங்கைத் தூதரகம் இல்லை. சொற்ப எண்ணிக்கையிலான இலங்கையர்களே கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் பஹ்ரெய்னிலுள்ள இலங்கையர்களுக்கு இணையத்தளம் மூலம் வி;ண்ணப்ப படிவமொன்றை வழங்கி தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறோம் என இலங்கையின் கௌரவ தூதுவர் பி.பி.ஹிகோட தெரிவித்தள்ளார்.

வீட்டுப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் குறித்த மேலதிக தகவல் எதுவும் எம்மிடம் இல்லை என அவர் கூறினார்.
இந்நிலையில் இலங்கைப் பணிப்பெண்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஹ்ரெய்னில் சுமார் 14,000 இலங்கையர்கள் வசிக்கினற்னர். அவர்களில் 3500 பேர் வீட்டுப்பணியாளர்கள் ஆவர். ஏனையோர் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள், பொறியியலாளர்கள் ஆவர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .