2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தருஸ்மன் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்கமாட்டாதென்றும் இலங்கையில் யுத்தம் முடிந்த பின் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி அறிக்கைகள் தொகுதியொன்றை தயாரித்துக் கொண்டுள்ளதென்றும் இது சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்படுமென்றும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவை அரசாங்கம் அங்கீகரிக்காததால் அதற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்காதென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த முன்னரும் ஐ.நா. செயலாளர் நாயகம் இந்த அறிக்கைக்கு பதிலளிக்குமாறு அரசாங்கத்தை கேட்டிருந்தார். அப்போதும் நாம் பதிலளிக்கமாட்டோமென கூறினோம் என அவர் கூறினார்.

இருப்பினும் நாட்டின் இப்போதைய நிலை பற்றி அரசாங்கம் விளக்கமான அறிக்கைகளை தயாரித்துக்கொண்டுள்ளது. இதில்லொன்று ஜனாதிபதி செயலணி மேற்கொண்ட உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் பற்றியது. வடக்கின்  நிலைமை பற்றிய விவரணங்களைக் கொண்ட, பாதுகாப்பு  அமைச்சாலும் பாதுகாப்பு செயலாளராலும் தயாரிக்கப்பட்ட 120 பக்க அறிக்கையொன்றும் உள்ளதென அவர் கூறினார்.

செயலாளர் நாயகமாக பான் கீ மூன் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை இலங்கை ஏன் எதிர்க்கவில்லையெனக் கேட்டபோது, தனிப்பட்ட வெறுப்பு மற்றும் பகை எமக்கில்லை. இந்தப் பிரச்சினையை உணர்ச்சி வசப்படாது பகுத்தறிவு ரீதியாக தீர்க்க வேண்டும். இந்தக் காரணங்களால் தான் நாம் அவருக்கு எமது ஆதரவை வழங்கினோம் என அவர் கூறினார். ( Dianne Silva)


You May Also Like

  Comments - 0

  • ajan Tuesday, 21 June 2011 07:15 PM

    இவர் ஒரு அறிக்கை, கெஹலிய ஒன்று , கோத்த ஓன்று பிறகு சந்திர ஓன்று , பிறகு பலித்த ஓன்று பிறகு பின் கதவு வழியாக ஐநாவில் ஒரு பேச்சி,
    அப்படியே காப்பி குடிக்க அழைப்பது.. . இன்னுமா உங்களை இந்த உலகம் உங்களை நம்புது என்று நினைத்துகொண்டு இருக்கிறிங்க. ஹி ஹி ஹி தருஸ்மன் அறிக்கை என்று அழைப்பது இயலாமையின் வெளிப்பாடு.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Tuesday, 21 June 2011 09:31 PM

    பதில் அளிக்க அதில் ஏதாவது இருந்தால் தானே! அவர்களே கூறுகின்றனர் இலங்கையே விசாரிக்கலாம் என்று பான்கிமூன் இரண்டாவது முறையும் ஐ நா பொதுச் செயலர் ஆவதற்கு இலங்கை தனது ஆதரவையும் நல்குகிறது! தாருஸ் சமான் அறிக்கை அல்ல அது! அது பன்கிமுன் அறிக்கையே! தாருஸ் சமான் பெயர் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. நான் அதை ரத்னர் அறிக்கை என்றே கூறுவேன் அல்லது பங்கம் அறிக்கை. தேசபங்கம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .