2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

Super User   / 2011 செப்டெம்பர் 17 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லால் குமார)

யாராவது மிருகங்களை கொன்றால் அவர்களின் கையை வெட்டுவேன் என பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனி தர்மாலோக வித்தியாலயத்தில் கணினி பிரிவொன்றை திறந்துவைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

மனிதர்களுக்கு பசுக்கள் செய்யும் நன்மைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் மேர்வின் சில்வா, இனிமேல் வீடுகளில் உணவுக்காக இறைச்சி வாங்க வேண்டாம் என பெற்றோரை கோருமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கம்பஹா மாவட்டத்தில் மாடுகளை கொல்வத்தை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியாக கூறினார்.

மேற்படி பாடசாலை அதிபர் ஏ.ஜி. நிமல் ஜயவீர, பிரதி அதிபர் வண.நாபாகொட சுமணதிஸ்ஸ தேரோ ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • anilar Sunday, 18 September 2011 11:33 PM

    இலங்கையில் நடந்த யுத்தத்தின் போது நிறய பயங்கரவாதிகளை படையினர் கொன்றனர் இதற்கு அப்போ மேர்வின் உட்பட எல்லோரும் ஆதரித்தனர். அப்ப பயங்கரவாதிகளும் மனிதர்கள்தான். அப்ப மிருகங்களை கொள்ளக் கூடாது மனிதர்களைக் கொள்ளலாமா??? சேர்

    Reply : 0       0

    sham Sunday, 18 September 2011 07:46 PM

    மீன், கோழி, என் அதை கொல்வதை நிறுத்த முடியாதா? மீன் மார்க்கெட்டை மூடுவீர்களா?

    Reply : 0       0

    rakkish. Sunday, 18 September 2011 08:09 PM

    மிருகங்களை கொன்றால் கைய வெட்டுங்க.. மனிதர்களை கொன்றா கைய தட்டுங்க.. எல்லோரும் மரக்கறி சாப்பிட ஆரம்பிச்சா அப்புறம் மரக்கறிக்கு எங்கயா போறது??

    Reply : 0       0

    ja Sunday, 18 September 2011 08:52 PM

    mervin petchi vidinja pochchu

    Reply : 0       0

    xlntgson Sunday, 18 September 2011 09:16 PM

    சடங்கு என்ற பெயரால் கொல்வதையே எதிர்க்கின்றோம். தினசரி இறைச்சிக்காகக் கொல்வதை அல்ல என்று கூறப்படுகிறது. அப்படியானால் பௌத்த மதத்தில் கையை வெட்டுவேன் என்று மிரட்டி பலரை மனக்கஷ்டத்தில் ஆக்கலாம் என்று எங்கே உள்ளது, கொல்வேன் என்பவன் கொல்லான் கொல்பவன் சொல்லிக்கொண்டு செய்யான். உலகில் படைகளை வைத்துப்பராமரித்து யுத்தங்களை புரிந்து கொண்டு பல மக்களை கொன்று குவிப்பதும் சடங்கு தான் துஷ்ட நிக்கிரகத்துக்காக சிங்கள அரச காலத்தில் சிரச்சேதம் செய்ததும் சடங்கு தான் மேர்வின் ஒரு கிராமாதிகாரியை மரத்தில் கட்டியதும்....

    Reply : 0       0

    karan Sunday, 18 September 2011 09:23 PM

    மிருகம் பலிடுதல் என்பது சிலவேளைகளில் மதம் சார்த்த நம்பிக்கை .

    Reply : 0       0

    mcafareed Sunday, 18 September 2011 09:44 PM

    ஒரு முறை வீட்டசொல்லிப் போட்டு கல்முனைப் பக்கம் வாங்களேன்,

    Reply : 0       0

    sakeena. Sunday, 18 September 2011 09:51 PM

    குடிக்கிற தண்ணீரில் கூட தான் உயிடுள்ளதுஇ அது மட்டுமா மரக்கறி.. !இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நாட்டில் மாடு அறுக்காது போனால் என்ன நடக்கும் தெரியுமா லெதர் தேவைக்கு மனுஷ தோலைத்தான் எடுக்கவரும்.

    Reply : 0       0

    xlntgson Sunday, 18 September 2011 10:07 PM

    மரக்கறியை உணவாகக்கொள்வது இங்கே பிரச்சினை அல்லவாம், மதச் சடங்காக இறை கட்டளை/கடவுளுக்கு சமர்ப்பணம் என பலி செய்வதைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர்- நான் மரக்கறி உணவையே எந்நாளும் உண்கின்றேன் சாதாரணமாக, நோய் நொம்பலம் குறைவு ஆனால் ஹஜ்ஜுப்பெருநாளுக்காக அறுக்கப்படும் இறைச்சியை உணவாக்கி அருந்தாமல் விடேன்!
    அதில் பெரும் தத்துவம் உளது அதனாற் தான் நரபலி அற்றுப்போனது, அதுவே காட்டு மிராண்டித்தனத்தை இல்லாமற் செய்தது உலகில்! கருணையான இறைவனின் பெயரால் கொலையா என்பவர்கள் euthanasia கருணைக் கொலையை ஆதரிப்பது வேடிக்கை!

    Reply : 0       0

    zamroodh Sunday, 18 September 2011 10:09 PM

    இவர் சொல்வதுபோல் மிருகங்களை அறுக்கவோ , கொல்லவோ வேண்டாமென்றால் இலங்கையில் மிருகங்கள்தான் அதிகமாகும். இலங்கை முழுவதும் நாறும், நோய்கள் பரவும், இறுதியில் மனிதர்களில்லாமல் மிருகங்களை வைத்துதான் ஆட்சி நடத்த வேண்டும்.

    Reply : 0       0

    rozan Sunday, 18 September 2011 11:31 PM

    இவர் அம்பு......ஏய்தவர் இருக்கிறார்......உலக நாட்டினால் மட்டும் தான் கண்டு கொள்ளமுடியும்.....

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 18 September 2011 06:38 PM

    முழு இலங்கையிலும் ஆயிரம் ஆயிரம் ஆடுகளையும் மாடுகளையும் வரும் ஹஜ் பெருநாளையும் அதனை அடுத்த மூன்று தினங்களிலும் அல்லாஹ்வின் மகத்துவத்தின் பேரில் உழ்ஹிய்யாவாக அறுத்து பழி இடத்தான் போறம்.

    Reply : 0       0

    Kajan Sunday, 18 September 2011 11:59 PM

    கடவுளின் பெயரால் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேணும். 2009 இற்கு முதல் இந்நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் தடை சட்டங்கள் போட்டு இதை தடுக்கலாம். என்னதுக்கோவேல்லாம் சட்டம் இருக்கிறது. இதை ஏன் அரசு செய்யுதில்லை?
    மேர்வினின் நடவடிக்கை கட்டப்பஞ்சாயத்து.

    Reply : 0       0

    manithan Monday, 19 September 2011 12:49 AM

    வெள்ளைச் சட்டை போட்டால் உள்ளே இருக்கும் அழுக்கு எல்லாம் மறஞ்சிடுமா ?

    Reply : 0       0

    Ifthikar Monday, 19 September 2011 01:04 AM

    சாராயம், பிராந்தி குடிப்பதற்கு இந்த இறைச்சி தானே தேவை.. உங்க சட்டங்களுக்கு நாங்க அடிபணிந்தாலும் உங்களால் இந்த இறைச்சியை கட்டுப்பட்டு இருக்க முடியாது.. காலமே பதில் சொல்லும்! பொறுத்திருந்து பார்ப்போம்!!

    Reply : 0       0

    Naleem Monday, 19 September 2011 01:15 AM

    இப்பன்டா போல மனிசன மனிசனாகவா பாக்குறாங்க? மிருகத்த விட மோசமாகத்தான கவனிக்கிறாங்க.

    Reply : 0       0

    tvamban Monday, 19 September 2011 01:55 AM

    நாய்க்கு.....ஏன் போர்த்தேங்காய்........?

    Reply : 0       0

    ...... Monday, 19 September 2011 03:41 AM

    நடக்குற காரியமா இது!

    Reply : 0       0

    shals Monday, 19 September 2011 04:02 AM

    mr மேர்வின் பேச்சு நல்ல வார்த்தை இல்லை.

    Reply : 0       0

    riyas Monday, 19 September 2011 11:31 AM

    ஒரு இனத்தை அடக்கி விட்டோம், மற்ற இனத்தை அடக்குவோம் என்ற இனவெறிதான் இன்று நாட்டில்.

    Reply : 0       0

    சத்தியா Tuesday, 20 September 2011 05:42 PM

    இவர்களுக்கு செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா? ஆடு,மாடு அறுக்காம ஒரு மாதம் நிப்பாட்டினால் போதும் நடக்கிறது என்னன்டு பாக்கலாம். அடுத்து கோழி,மீன்...எல்லாம் உயிர் இல்லையா???? குர்பானிக்கு அறுப்பதால் உங்கள் ஊர்களில் அருகில் வசிக்கும் மாற்று மதத்தாருக்கும் கொடுங்கள்.....

    Reply : 0       0

    rozan Sunday, 18 September 2011 08:27 AM

    இதுக்கு கமெண்ட் இல்ல சார் ............. ஏல்லாம் பெரிய இடத்து ஆடர்....

    Reply : 0       0

    IBNU ABOO Sunday, 18 September 2011 04:34 AM

    . ஆடு மாடு போன்ற விலங்குகளை இறைவன் ஏன் இறைவன் படைத்த்தான் .மனிதனை படைத்த இறைவன் மனிதனுக்காகதான். மற்ற அனைத்தையும் படைதான். ஆனால் அவற்றை காரணமின்றி அநியாயமாக கொல்வது பாவம். இறைவன் படைத்த மனித பல்வரிசையில் இறைச்சி போன்றவை வெட்டி சாப்பிடவும் பற்கள் அமைக்கப்பட்டுள்ளதை டாக்டர் சாகிர் நாயக் விளக்கியுள்ளதை நினைவு கூறுங்கள். இந்தக் கேடு கேட்ட மனிசருக்கு மிருகத்தை கொன்றவரின் கையை வெட்டுவாராம். அப்போ மிருகத்தை விட மனிதன் கேவலமா.

    Reply : 0       0

    kk Sunday, 18 September 2011 04:56 AM

    இனப்பற்று அதிகம் உள்ளவர், தனது இனம் அழிவதை விரும்பாதவர்.

    Reply : 0       0

    nnnassm Sunday, 18 September 2011 05:07 AM

    எதுவரை போக முடியும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

    Reply : 0       0

    raswin Sunday, 18 September 2011 05:10 AM

    நல்லம் செய்ங்க.

    Reply : 0       0

    suf suf subahaa Sunday, 18 September 2011 05:11 AM

    பூரணை காலங்களில் தான் பித்தம் தலைக்கேறும் என்பர். பூரணை கடந்தபின்பும் பித்தம் தலையிலிருந்து இறங்கவில்லையோ?

    Reply : 0       0

    bzukmar Sunday, 18 September 2011 05:25 AM

    பொதுமக்கள் விவகார அமைச்சர் என்பதை மாக்கள் (மே...மே....ம்ம்பா...ம்ம்பா....)அமைச்சர் என கூறலாமே?

    Reply : 0       0

    ruzny Sunday, 18 September 2011 06:26 AM

    இவரை கல்முனை பக்கம் வரசொல்லுங்கோ...

    Reply : 0       0

    Janan Sunday, 18 September 2011 06:51 AM

    முதலில் அமைச்சரை கதைக்க பழக்க வேனும் ......... அடக்கி வெக்க ஆள் இல்லாததால இந்த ஆட்டம்........ பெயரில் மட்டும் ஜனநாயக நாடு ???????????????

    Reply : 0       0

    Kalkudah Adam Sunday, 18 September 2011 08:03 AM

    கொலை, கொள்ளை, கப்பம், ஆள்கடத்தல், லஞ்சம் இவை எல்லாம் ஒரு பிரச்சினை கிடையாது? மிருகம் மட்டும் தான் பிரச்சனை?

    Reply : 0       0

    KLM Sunday, 18 September 2011 03:59 AM

    ஆரம்பிச்சட்டாரா?

    Reply : 0       0

    அல்கா Sunday, 18 September 2011 11:09 AM

    அப்ப இறைச்சிக்கடை வைச்சிருக்கிறவங்கடை கை எல்லாம் போச்சா....

    Reply : 0       0

    Jawahir Saly Sunday, 18 September 2011 02:02 PM

    கௌரவ மேர்வின் அவர்களே கொலை என்பதில் நீங்கள் காட்டும் அனுதாபத்திற்கு நன்றிகள் , மனிதர்களை ஒருநாளும் இறைச்சிக்காக அறுக்க மாட்டார்கள் , உண்ணக்கூடியவற்றைத்தான் அறுப்பார்களே தவிர கொல்ல மாட்டார்கள், இது எங்களுக்கு அல்லாஹ் தந்த உரிமை இதில் கையடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்கள் வீரத்தை எல்லா இடங்களிலும் காட்ட வேண்டாம் , நாங்கள் நாட்டில் அதி மேதகு ஜனாதிபதியை நம்பி இருக்கிறோமே தவிர உங்களை அல்ல. தொடர்ந்து இவ்வாறு நீங்கள் நடப்பதும் கருத்து வெளி இடுவதும் நாட்டின் அமைதிக்கு நல்லதல்ல .

    Reply : 0       0

    sadath Sunday, 18 September 2011 02:28 PM

    வாவ் அதானே பாத்தேன் மச்சான் திரும்ப thodankidaru

    Reply : 0       0

    alga Sunday, 18 September 2011 03:09 PM

    சின்ன பிள்ளை தனமா இல்ல ???

    Reply : 0       0

    mam.fowz Sunday, 18 September 2011 03:39 PM

    மனிதனை கொன்றால் என்ன தண்டனை சாமி ....

    Reply : 0       0

    sopnam Sunday, 18 September 2011 03:45 PM

    (அ)சிங்கமொன்று புறப்பட்டதே.............

    Reply : 0       0

    ramzeen Sunday, 18 September 2011 04:21 PM

    இன்னும் இவர்கள் கை மண் அளவுதான். மிருக வதை என்றால் என்ன என்பதை முதலில் கற்று வரவும்.

    Reply : 0       0

    AJ Sunday, 18 September 2011 05:15 PM

    இந்த வன்முறை பேச்சிக்கு இந்த அடாவடி தனத்துக்கு ஒரு சட்டமும் இல்லை ? போலீஸ் அப்போ எதுக்கு இருக்கிறது. சாதாரண பொது மக்களுக்கு ஒரு நீதி இந்த கும்பலுக்கு ஒரு நீதி.

    Reply : 0       0

    Rizlan Sunday, 18 September 2011 05:44 PM

    முஸ்லிம்களின் உல்ஹியா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .