2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுடடா சுடடா என கத்தியவாறு பிரேமச்சந்திராவை துமிந்த சுட்டார்: சாட்சியம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாரூக் தாஜுதீன்)

தேர்தல் தினத்தன்று முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் மரண விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.

குற்றப்புலனாய்வு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகர சாட்சியத்தை நெறிப்படுத்தினார். தேர்தல் தினத்தன்று கொலன்னாவை, கொட்டிக்காவத்த, முல்லேரியா ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது தம்மோடு இன்னொரு கார் இணைந்துகொண்டதாக பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் சாரதி தனது சாட்சியத்தில் கூறினார்.  அப்போது சொலங்க ஆராச்சி என்பவர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு: தமது ஆதரவாளர்களை துமிந்த சில்வா அடித்ததாகக் கூறினார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் வாகனம் வல்பொல சந்தி நோக்கிச் சென்றபோது, துமிந்த சில்வாவின் வாகன அணி அதை வழிமறித்ததாக சாட்சியான லியனகே சமந்த பெரேரா கூறினார்.

அவ்விடத்தில் 100 பேர் வரை குழுமியிருந்ததாகவும் அவர்களிடையே ரி – 56 றைபிள் வைத்திருந்தோரும் காணப்பட்டதாகவும் அவர்களுள் ஒருவர் மிரிஹான பொலிஸைச் சேர்ந்த அதிகாரியென்றும் அவர் சாதாரண ஆடை அணிந்திருந்ததாகவும் சாட்சியமான சமந்த பெரேரா கூறினார். தன்னால் அவரை அடையாளம் காட்டமுடியுமென சாட்சி கூறினார்.

துமிந்த சில்வாவும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவும் வாகனத்திலிருந்து இறங்கி வாக்குவாதப்பட்டதாகவும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கி வைத்திருந்ததை தான் காணவில்லையெனவும் அவர் கூறினார்.

துமிந்த சில்வாவும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவும் ஒருவக்கொருவர் கன்னத்தில் அடித்ததை தான் கண்டதாக சாட்சியமளித்த சமந்த பெரேரா குறிப்பிட்டார்.

இதன்போது தாடி வைத்திருந்த உயரமான ரி - 56 றைபிள் வைத்திருந்த ஒருவர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவை அடிக்க அவர் கீழே விழுந்ததாக சாட்சி கூறினார்.

அப்போதுதான் துமிந்த சில்வா 'சுடடா, சுடடா' என கத்தியபடி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவை சுட்டதாக சாட்சியான சமந்த பெரேரா கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .