2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'அனல் மின் நிலையத்திற்கான காணி சுவீகரிக்கப்பட்டபின் சம்பூரின் எஞ்சிய காணிகளில் மக்கள் குடியமர்த்தப்ப

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

திருகோணமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான காணிகள் சுவீகரிக்கப்பட்ட பின்னர் எஞ்சிய காணிகளில் மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

தற்போது அனல் மின் நிலையத்திட்டத்திற்னெ உத்தேசிக்கப்பட்டுள்ள 2795 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் மக்கள் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சில காணிகள் அனல் மின் நிலையத்திற்காக சுவீகரிக்கப்படும். எஞ்சியவை அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார்.

'நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக நாம் காணிகளை பெற்றுக்கொள்கிறோம். அவற்றுக்கு நாம் நஷ்ட ஈடு வழங்குவோம். மேல் கொத்மலை, கெரவலப்பிட்டிய மின்சாரத் திட்டங்களுக்காகவும் நாம் காணிகளை சுவீகரித்தோம். வீதிகளை நிர்மாணிக்க வேண்டுமானால் சில வேளைகளில் தனியார் காணிகளை சுவீகரிக்க நேரிடலாம்' என அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின்; காணிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன்  தெரிவித்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி காணிகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் காணி உறுதிகளையும் அனுமதிப்பத்திரங்களையும் கொண்டிருப்பதாக சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

'அப்பகுதியில் ஓர் புனிதமானமான இந்து ஆலயமொன்று உள்ளது. அது பத்ரகாளி அம்மன் கோவில். நான் சிறுவனாக அங்கு சென்றிருக்கிறேன். அது மிக சக்திவாய்ந்த தெய்வம். அதை மனதிற்கொள்ளுங்கள்' என சம்பந்தன் எம்.பி.கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .