2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாட்டின் மீது அச்சுறுத்தல்கள் தொடர்வதால் பாதுகாப்புக்கு அதிக நிதி : ஜனாதிபதி

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஜயசேகர)

 

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்திலிருந்து வீரம் மிகுந்த படையினரால் தாய்நாடு விடுவிக்கப்பட்டபோதிலும் தேசத்தின்மீதும் நாட்டின் மீதும் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் 2012 வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக பெரும்நிதியை ஒதுக்குவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் 2 வருடங்களுக்கு முன்னர் ஒழிக்கப்பட்ட போதிலும் இலங்கை எதிர்கொண்ட சவால்கள் முடிந்துவிடவில்லை என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 23 November 2011 05:48 AM

    ஜனாதிபதி அவர்களே, எந்த வகையான அச்சுறுத்தல் என பகிரங்கபடுத்துவீர்களா? உங்களது நாட்டு மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க முடியுமல்லவா?

    Reply : 0       0

    saheena Wednesday, 23 November 2011 07:02 PM

    attana natkaluuku idaiya sollikkondo iruppadu
    janathi pady awarkale

    Reply : 0       0

    saheena Wednesday, 23 November 2011 07:14 PM

    பட்ஜெட் மாற்றங்கள் ஆவதுக்கு சத்தியம் உண்டா ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .