2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிரதம நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்களை பகிரங்கப்படுத்தியமைக்கு தவறு: சரத் என்.சில்வா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கூறினார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணை ஒழுங்குப் பிரச்சினையைச் சார்ந்ததாகும்.எனவே, தெரிவுக்குழுவுக்கு சட்ட அதிகாரம் கொடுக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குற்றச்சாட்டுக்களும் பதில்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டன. இந்த பிரச்சினை இப்போது பகிரங்க விசாரணை போல ஆகிவிட்டது. இது நீதித்துறையை மேலும் பாதிக்கும் என அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் தனக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவந்த போது தான் இதுபோன்ற சங்கடமான நிலையில் இருந்ததாகவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

'இது எனக்கும் நடந்தது. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பகிரங்கப்படுத்தப்பட்டன. எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. இவற்றுக்கு பதில் கூற எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. எனவே ஒழுங்குப் பத்திரத்தை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதாயிற்று. தெரிவுக்குழு ஒருபோதும் நியமிக்கப்படவில்லை. எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை தான் என பலர் இப்போதும் நம்புகின்றனர்' என அவர் கூறினார்.

இந்த பிரச்சினை முழுதாகவே நிர்வாகம் சம்பந்தப்பட்டது. குற்றச்செயல் சார்ந்த குற்றங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சட்ட அதிகாரம் இருக்கக்கூடாது என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .