2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தண்டனைகளை அரசு ஆராயவுள்ளது: மொஹான்

Kanagaraj   / 2012 நவம்பர் 15 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதை தவிர அவர்களுக்கு வேறு தண்டனைகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராயவுள்ளது.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவே வேறு தண்டனைகள் குறித்து ஆராயவிருப்பதாக முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தடுத்து வைத்தல் அல்லாத வினைத்திறன் மிக்க பல்வகையான தண்டனைகள் இருக்கின்றன அவ்வாறானவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து ஆராயவிருக்கின்றோம்.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்த விடயத்தில் கவனம் செலுத்திவருகின்றார்.

விளக்கமறியல் அல்லாத தண்டனை என்பது மறியல் அல்லாமல் வேறு எங்காவது அனுபவிக்க வேண்டிய குற்றவியல் தண்டனையாகும் நன்னடத்தை என்பதும் இந்த வகையை சார்ந்ததாகும் என்றார்.

இதேவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வெலிக்கடை சிறைச்சாலை கலகம் பற்றி விசாரிக்க போவதாக கூறியுள்ளது .

அதுமட்டுமன்றி கையடக்க தொலைபேசிகளை அகற்றுவதற்கு விசேட அதிரடிப்படையை அனுப்ப வேண்டுமா? தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குவின் தலைவர் யார்? ஆக்குழுவின் தலைவர் ஜனாதிபதியாவார் அவரினால் கையடக்க தொலைபேசிகளை இலவாக செயலிழக்க செய்திருக்க முடியும் என ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறையுடைப்பை நிறுத்துவதற்கு வன்முறையில்லாத முறைகளை பற்றி அரசாங்கம் சிந்திக்கவே இல்லை. சிறையிலிருந்து தப்பியோடியவர்களை நீங்கள் கொல்ல முடியாது.

அவர்களுக்கான தண்டனையை கூட்டியிருக்கலாம் ஆனால் நீங்கள் அவர்களின் உயிரை எடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே முன்னாள் சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .