2024 மே 09, வியாழக்கிழமை

வங்கியில் வைப்பிலிட்ட பணம் அபகரிக்கப்பட்டதாக வழக்கு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

வங்கியில் வைப்பிலிட்ட 17,724 அமெரிக்க டொலர்களை அரசுடைமையான வங்கியொன்று அபகரித்துவிட்டது என பெண்ணொருவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஷிரானி அனோமா துலாவ என்ற மேற்படி பெண், கொள்ளுப்பிட்டியிலுள்ள அரச வங்கியொன்றில் கடந்த 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி, வதிவோர் வெளிநாட்டு கணக்கில் 17,724 அமெரிக்க டொலர்களை வைப்பு செய்ததாகவும், தான் அந்தப் பணத்தை மீளப் பெறச் சென்ற வேளையில் அந்தப் பணம் மீளப்பெறப்பட்டு விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தான் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி வங்கியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், முறைப்பாட்டாளர் வங்கிலிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தாதபடியால் அவரது கணக்கிலிருந்து கடன் பணம் கழிக்கப்பட்டதாக கூறினார்.

இருப்பினும் தான் கடன் ஏதும் பெறவில்லை என குறித்த பெண் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X