2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காணாமல் போனவர்கள் பற்றி ஆராய ஆணைக்குழு

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

30 வருட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளரான லலித் வீரத்துங்கவிற்கே மேற்கண்டவாறு ஜனாபதி பணித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ள பணி மற்றும் கட்டளைகள், அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விபரம் தொடர்பான தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படுமென ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமித்த கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது, யுத்தகாலத்து மனித உரிமை மீறல் மற்றும் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு பரிந்துரை செய்திருந்தது.

இலங்கை இராணுவம் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியிருந்த கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு, தேவையேற்படின் வழக்குகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு ஆதாரங்களை வழங்குவதோடு காணாமல் போனமை தொடர்பாக ஆராய அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தது.

முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களில் 99 சதவீதமானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.

புலிகளினால் கொல்லப்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த  9000 பேருக்கு அரசாங்கத்தினால் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .