2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதில் குழப்பம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 17 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பதில் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டதையடுத்து மத்திய மாகாண சபையின் நேற்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை.

மத்திய மாகாண சபையமர்வு நேற்று நடைபெற்றபோதே எதிர்க்கட்சித்தலைவரை நியமிப்பது தொடர்பில் குழப்பகரமான நிலை ஏற்பட்டது.

மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய தேசிய கட்சியினால் நியமித்திருந்த போதும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் லகீ ஜயவர்தனவை நியமிக்குமாறு 12 உறுப்பினர்கள் கோரியதனால் இக் குழப்பம் ஏற்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி பிரச்சினை காரணமாக எதிர்கட்சித் தலைவரை அறிவிக்க முடியாதுள்ளதாகவும் அடுத்த கூட்டத்தில் எதிர் கட்சி தலைவர் யார் என்பதை அறிப்பதாகவும் மத்திய மாகாண சபையின் தவிசாளர் மஹிந்த அபேகோன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .