2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மிருகங்கள் இருக்குமிடத்தில் மனிதர்கள் வசிக்கலாகாது: பொது பல சேனா

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


மிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மனிதர்கள் இருக்கலாகாது என்று வில்பத்து சரணாலயப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் இந்த வீடுகளை நிர்மாணிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதியுதவி வழங்குவதாகவும் முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த சரணாலத்தின் வடக்கு பிரதேச காணிகளை பலவந்தமாக பிடித்து, அங்குள்ள காடுகளை அழித்து வருவதாகக் கூறி, பொது பல சேனா அமைப்பினர் குறித்த பிரதேசத்தைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.

அவ்வமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட பலர், செவ்வாயன்று (08), மேற்படி பிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களைப் பார்வையிட்டதுடன், மிருகங்கள் இருக்க வேண்டிய பிரதேசத்தில் மனிதர்கள் இருக்கலாகாது என குறிப்பிட்டார்.

இதன்போது, சிலாவத்துறை பொலிஸார், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரும் பொது பல சேனா அமைப்பினரும் குறித்த பிரதேசத்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • Ash Thursday, 10 April 2014 07:00 AM

    இலங்கையில் இன்று இரண்டு தரப்பினர் சம பலத்துடன் ஆட்சி செய்கின்றனர் என்ற முடிவுக்கு பார்வையாளர்களாகிய எம்மால் உணர முடிகிறது. ஏனெனில் பல அமைப்புக்களையும் நபர்களையும் தடை செய்த அரசாங்கத்தால் பொ.பல சேன அமைப்பினரை தடை செய்ய முடியவில்லை. பொ.பல சேன அமைப்பினர் அழையா விருந்தாளியாக அத்துமீறி நுழைந்து ஏனைய சமூகத்தவர்களின் விடயத்தில் செயற்படுகின்றது. அரசாங்கம் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதற்கு ஒரே தீர்வு பாதிக்கப்பட்டவர்கள் தம்மைப் படைத்த இறைவனிடம் முறையிட்டு தீர்வு தேடுவதேயாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .