2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பில் டெங்கு பெருகும் 472 இடங்கள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

கொழும்பு வடக்கிலும் மட்டக்குளி – கொட்டாஞ்சேனை பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பரிசோதனை நடவடிக்கைகளின்போது டெங்கு நுளம்பு பெருகும் 472 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 38 இடங்கள் நிரந்தரமானவை என்றும் கொழும்பு மாநகரசபை இன்று அறிவித்துள்ளது.

டெங்கு தடுப்பு வாரத்தை முன்னிட்டு நடத்த இந்த நடவடிக்கையின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளதை அவதானித்ததாக கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.

நாட்டில் டெங்கு மோசமாக பரவியுள்ள இந்த கட்டத்தில் மக்களிடமிருந்து எமக்கு சொற்ப ஆதரவே கிடைத்தது. மக்கள் டெங்குடன் வாழப் பழகிவிட்டனர். எமது முன்னைய டெங்கு ஒழிப்பு இயக்கத்தின் போது கிடைத்த தொண்டர் நிறுவனங்கள், சிவில் சமூக நிறுவனங்கள் உட்பட பொதுமக்களின் ஆதரவு இம்முறை கிடைக்கவில்லை என கூறினார்.

இந்த தேடுதலின் போது 1,126 வீடுகளும் நான்கு பாடசாலைகளும் இரண்டு வெற்றுக் காணிகளும் பார்வையிடப்பட்டன. கொழும்பு மத்தி, கொள்ளுப்பிட்டி – மருதானை பகுதியில் ஜூலை 22ஆம் திகதியும் பொரளை பகுதியில் 23ஆம் திகதியும் கொழும்பு – கிழக்கு திம்பிரிகஸ்யாக – கிருலப்பனை பகுதியில் 24ஆம் திகதியும் கொழும்பு மேற்கு பம்பலப்பிட்டி – வெள்ளவத்தையில் 25ஆம் திகதியும் தேடுதல் நடைபெறும்' அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson 0776994341;0716597735 sms only Friday, 24 June 2011 09:41 PM

    மரங்களில் விழும் இலைகளில் மழை நீர் தேங்கி அதில் டெங்கு கொசுக்கள் முட்டை இட்டு புழுவாகி கொசுவாகி நம்மைக் கடித்து அதனால் அந்த நோய் எல்லா இடமும் பரவும் என்று கூறப்படுவதனால் அநேகர் மரங்களை வெட்டி விடுகின்றனர். சுற்றாடலுக்கு மரங்கள் :-x:உண்மையில் விழுந்த இலைகளில் நீர் 10-14 நாட்கள் தங்கி இருக்க வாய்ப்பு இல்லை ஒரே மழையாக 2 கிழமை பெய்வதில்லை. இடையில் அடிக்கும் வெய்யிலிலே காய்ந்து போகிறது அல்லது அழுகிய இலைகளில் நத்தை உருவாகி செங்காகம் குருவிகள் இரையாக உண்ணுகின்றன. இதை நான் அனுபவத்தின் மூலம் கூறுகின்றேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .