2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு குருநாகல் பிரதான வீதியின், அலவ்வ பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி  சற்று முன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளன.

கல்நெவ பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸூடன், கொழும்பிலிருந்து கதுருவெல பிரதேசம் நோக்கிப் பயணித்த பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், பொல்காவெல மற்றும் அலவ்வ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .