2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கைப் பெண்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 11 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பெண்கள் ஜப்பானில் தொழில் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய,  ஜப்பான் மொழியில் N4 மட்டத்தில் சித்தியடைந்த 18 தொடக்கம் 30 வயதுக்கிடைப்பட்ட யுவதிகள் விண்ணப்பங்களை அனுப்பலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

​வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் IM என்ற ஜப்பான் நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்துக்கு அ​மைய குறித்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்கு செல்ல விரும்பும் 100 யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஜப்பான் செல்லும் யுவதிகளின் மாதாந்த கொடுப்பனவு 1,35,000 ரூபாய் வழங்கப்படவள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் வௌநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடாகவும், 0112- 2791814 என்ற அலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .