2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மனித எச்சங்கள் தொடர்பான காபன் அறிக்கையை அனுப்பவதில் அமெரிக்கா தாமதம்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள இரசாயன ஆய்வு கூடமொன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த மனித எச்சங்கள் தொடர்பான அறிக்கையை எதிர்பார்த்த நாளில் வழங்க முடியாதென, குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் ஊடாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காபன் அறிக்கையை இந்த மாதம் 14ஆம் திகதிக்குப் பிறகே  அனுப்ப  முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னாரில் உள்ள சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட  300 மனித எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட 6 மனித எச்சங்கள் கடந்த ஜனவரி 23ஆம் திகதி மன்னாரிலிருந்து கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட எச்சங்கள் குறித்த காபன் அறிக்கையினை பெப்ரவரி மாதம் 2ஆம் வாரத்தில் அனுப்ப முடியம் என குறித்த இரசாயன ஆய்வுக் கூடம் தெரிவித்திருந்தது.

எனினும் அடுத்த வாரமே அந்த அறிக்கையை அனுப்ப முடியும் எனத் தெரிவித்துள்ள நிறுவனம் குறிப்பிட்ட தினத்தில் அதனை ஏன் அனுப்ப ​முடியவில்லை என்பதற்கான காரணத்தை மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .