2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாகாண எல்லை நிர்ணயத்தால் ’சிறுபான்மையினருக்கு அநீதி’

Editorial   / 2018 ஜூலை 11 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புதிய மாகாண சபை எல்லை நிர்ணயத்தினால் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபையின் குழுக்களின் தலைவருமான எம்.ஐ.எம்.ஆஷிக் தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் (10) சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாஸ் தலைமையில் இடம்பெற்றபோது, மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் மகஜர் ஒன்றை தாம் சபைத் தலைவரிடம் கையளித்துள்ளதாகவும் ஆஷிக் ௯றினார்.

இது தொடர்பில் அவர் மேலும்  குறிப்பிடுகையில்,  "இலங்கையின் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு நன்கு திட்டமிட்டு குறித்த மாகாண சபை எல்லை நிர்ணயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்து இனத்தவர்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.  இந்த நாட்டில் குழப்பங்கள்,  பிளவுகள் ஏற்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் எமக்கு அநீதியே இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .