2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’வேலை நிறுத்தத்தை எதிர்கொள்ளத் தயார்; 1,500 பஸ்கள் கைவசம்’

Editorial   / 2018 மே 16 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

"தனியார் பஸ் சங்கங்கள் எதிர்ப்பார்த்த அளவு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டாலும், அவர்களது கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது" என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், அந்த நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு சுமார் 1,500 பஸ் வண்டிகள் இலங்கை போக்குவரத்து சபையில் தயாராகவுள்ளதாகவும் மேலதிக புகையிரத சேவைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள வேலை நிறுத்த எச்சரிக்கை தொடர்பாக, இன்று, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிடார்.

"பஸ் கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 10 ரூபாவாக இருப்பதுடன் 6.56 சதவீதத்தினால் கட்டணத்தை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அதற்கு சமமான வகையில் பஸ் கட்டணத்தை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

புத்திஜீவிகள் சபை முன்வைத்த 12 பரிந்துரைகளை கருத்திற் கொண்டு இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது." என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .