2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’ஸ்ரீ ல.சு.கவின் முடிவை வரவேற்கிறோம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது. இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20ஆம் திருத்த யோசனையை  கைவிட வேடும் என்றும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள முடிவுகளை நாம் வரவேற்கிறோம்” என, ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இந்த ஒத்திவைப்பு அவசியமற்றது. ஒத்திவைக்க அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதைவிட புதிய அரசியலமைப்பை கொண்டு வரலாம். அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். ஆகவே,  உரிய வேளையில் சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்களை நடத்துவதே சாலச்சிறந்தது.

 

“ஆனால், அதை அவசர அவசரமாக புது ஒரு தேர்தல் முறைமையை அறிமுகம் செய்து நடத்த முடியாது. உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமை ஒருமுறை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும். எனவே, உள்ளூராட்சி சபைகள் தேர்தல்கள் புதிய முறைமையின் கீழ் முதலில் நடத்தப்பட வேண்டும். அதையடுத்து அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கணக்கில் எடுத்து, உருவாக்கப்படும் புதிய மாகாணசபை தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதை இப்போது செய்ய முடியாது.

 “ஆகவே, இப்போது நடத்தப்படவுள்ள சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாணசபைகளின் தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் இப்போதும் நடைமுறையில் உள்ள பழைய விகிதாரசார முறைமையின் கீழேயே நடத்தப்பட வேண்டும். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொது செயலாளர் மஹிந்த அமரவீரவிடன் இன்று காலை பேசியிருந்தேன். எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .