2024 மே 09, வியாழக்கிழமை

ஐ.ம.சு.மு வசமானது ஹம்பாந்தோட்டை

Kanagaraj   / 2014 மார்ச் 29 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளுக்குமான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 1,67,160 வாக்குகளை பெற்றுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சி 78,068 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 37,905 வாக்குகளையும் ஜனநாயகக்கட்சி 8604 வாக்குகளையும் மொத்தமாக பெற்றுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, திஸ்ஸமஹராம  தேர்தல் தொகுதி தேர்தல் தொகுதியில் 54,731 வாக்குகளையும் பெலியத்த தேர்தல் தொகுதியில் 32,393 வாக்குகளையும் முல்கிரிகல தேர்தல் தொகுதியில் 37,464 வாக்குளையும் தங்காலை தேர்தல் தொகுதியில் 42,572 வாக்குகளையும் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சி

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, திஸ்ஸமஹராம  தேர்தல் தொகுதி தேர்தல் தொகுதியில் 35,294 வாக்குகளையும் பெலியத்த தேர்தல் தொகுதியில 9,657 வாக்குகளையும் முல்கிரிகல தேர்தல் தொகுதியில் 15,607 வாக்குளையும் தங்காலை தேர்தல் தொகுதியில் 17,510 வாக்குகளையும் பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி

மூன்றாவது அணியான மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி), திஸ்ஸமஹராம  தேர்தல் தொகுதி தேர்தல் தொகுதியில் 13,665 வாக்குகளையும் பெலியத்த தேர்தல் தொகுதியில 5,521 வாக்குகளையும் முல்கிரிகல தேர்தல் தொகுதியில் 6,334வாக்குளையும் தங்காலை தேர்தல் தொகுதியில் 12,385 வாக்குகளையும் பெற்றுள்ளது.

ஜனநாயகக்கட்சி

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக்கட்சி திஸ்ஸமஹராம  தேர்தல் தொகுதி தேர்தல் தொகுதியில் 1,551 வாக்குகளையும் பெலியத்த தேர்தல் தொகுதியில 2,173 வாக்குகளையும் முல்கிரிகல தேர்தல் தொகுதியில் 1,825 வாக்குளையும் தங்காலை தேர்தல் தொகுதியில் 3055 வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதேவேளை,திஸ்ஸமஹராம தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 54,731 வாக்குகளை பெற்றுள்ளது.

2009 ஆம் இடம்பெற்ற தேர்தலின் திஸ்ஸமஹராம தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளை விடவும் இம்முறை 9343 வாக்குகள் குறைவாகவே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு 12061  வாக்குகளும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 3301 வாக்குகளும் கூடுதலாக கிடைத்துள்ளன.

தபால் மூல வாக்குப்பதிவு

இந்த மாகாண சபைக்கான தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்குப்பதிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7527 வாக்குகளையும் ஐக்கிய தேசியக்கட்சி 1761 வாக்குகளையும்;மக்கள் விடுதலை முன்னணி 1440 வாக்குகளையும்; ஜனநாயக கட்சி 907 வாக்கு களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X