2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வள்ளங்கள் 40 வழங்கி வைப்பு

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்,  ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மீனவர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு வள்ளங்கள் வழங்கப்பட்டன.

கிண்ணியா, மூதூர் , தோப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்கள் குடும்பத்தினருக்கு, துருக்கி, போலாந்து நாடுகளின் ஐ.எச்.எச்.என்.எல். அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் ஊடாக, இந்த வள்ளங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, அல்- ஹிக்கமதுல் உம்மா ஏற்பாட்டில், அதன் தலைவர் ஹஸ்ஸாலி முகம்மட் பாதிஹ்  தலைமையில் இன்று  (28) நடைபெற்றது.

பிரதம அதிதியாக நெதர்தலாந்து நாட்டின் ஐ.எச்.எச் .என.எல்  அமைப்பின் சலாமி யூக்சில், விசேட அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி, கிண்ணியா மஜ்லிஸ் சூரா சபைத் தலைவர் ஏ.ஆர்.எம்.பரீத், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஒ.கியாஸ் ஷாபி ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .