2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமலையிலிருந்து வெருகலை நோக்கி நடை பஜனை

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                         (எஸ்.எஸ்.குமார்)

வெருகலம்பதி அருள்மிகு சித்தர வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

திருகோணமலை மாவட்ட நடை பஜனைக் குழவினரால் ஒன்பதாவது வருடமாக இன்று  புதன்கிழமை வெருகலை நோக்கி நடை பஜனை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.  

திருகோணஸ்வரர் ஆலயத்தில் இருந்து காலை 6.00 மணிக்கு வேல் நடை பஜனை ஆரம்பமாகின்றது.

இந்த நடை பஜனையை காந்தீயப் பெரியார் பொ.கந்தையா ஆரம்பித்து வைப்பார்.

இன்று புதன்கிழமை புறபடும் வேல் நடை பஜனை ஞாயிற்றுக்கிழமை வெருகலம்பதி சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தைச் சென்றடையும். வழியில்,

22 ஆம் திகதி இரவு பெருவெளி கதிரேச பிள்ளையார் ஆலயம்,23 ஆம் திகதி  இரவு முன்னப்போடிவெட்டை வழிவிடு விநாயகர் ஆலயம், 24 ஆம் திகதி இரவு தங்க நகர் செண்பகவல்லி அம்மன் ஆலயம், 22 ஆம் திகதி இரவு  பூநகர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் என்பனவற்றில் பஜனை குழுவினர் தங்கியிருப்பர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .